ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: ராணுவ வீரர் ஒருவர் பலி

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: ராணுவ வீரர் ஒருவர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. 

இந்திய ராணுவ தரப்பில் இருந்தும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இந்திய பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.