கோவில்களில் திருடப்பட்ட ரூ.50 கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் மீட்பு...

கோவில்களில் திருடப்பட்ட ரூ.50 கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் மீட்பு...

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் நார்கோஜி கிராமத்தில் உள்ள ஒரு பழைய மடத்தில் வைக்கப்பட்டிருந்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை மர்ம கும்பல் கடந்த 12-ம் தேதி கொள்ளையடித்து சென்றது. 800 ஆண்டுகள் பழைமையான ராமர், சீதா, லக்‌ஷமணன் மற்றும் அனுமன் உட்பட 14 சிலைகள் அங்கிருந்த பாதுகாவலர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்தப்பட்டன.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், கொள்ளையர்கள் புர்னியா மற்றும் காதிகார் மாவட்டங்களில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிறப்பு விசாரணைக்குழு ஒன்று மாவட்டத்தின் பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டது. இச்சோதனையில் கடத்தப்பட்ட 14 சிலைகள் மீட்கப்பட்டன. மேலும், கொள்ளையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.