2 லட்சம் சீன சுற்றுலா பயணிகள் இந்தியா வருகை: சுற்றுலா துறை மந்திரி

2 லட்சம் சீன சுற்றுலா பயணிகள் இந்தியா வருகை: சுற்றுலா துறை மந்திரி

இன்று மாநிலங்களவையில் சுற்றுலா துறை மந்திரி அல்போன்ஸ் பேசியதாவது:

டோக்லாம் பிரச்னை எழுந்த நிலையிலும் சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை. இந்த ஆண்டில் 2 லட்சம் சீனர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். 2015 முதல் 2017ம் ஆண்டு வரையில் சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 9.28 சதவீதம் அதிகரித்து வந்துள்ளது.

2015-ல் 2 லட்சத்து 6 ஆயிரமாக இருந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 2016-ல் 2 லட்சத்து 51 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  அதேபோல், இந்த ஆண்டில் 2 லட்சத்து 25 ஆயிரம் சீனர்கள் சுற்றுலா வந்துள்ளனர்.இந்த பட்டியலில் வங்காளதேசத்தினர் 19 லட்சத்துடன் முதல் இடத்தில் உள்ளனர். அவர்களை தொடர்ந்து இலங்கை 3 லட்சம் பேருடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது என தெரிவித்துள்ளார்.