3 நாட்கள் மும்பையில் கனமழை எச்சரிக்கை

 3 நாட்கள் மும்பையில் கனமழை எச்சரிக்கை

மும்பை: மும்பை மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்கள் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ளம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள மாநகராட்சி முன்னேற் பாடுகளை செய்துள்ளது.
இந்தநிலையில், நாளை(சனிக்கிழமை) முதல் வருகிற 11-ந்தேதி வரை 3 நாட்கள் ரத்னகிரி, சிந்துதுர்க், மும்பை, தானே, ராய்காட், பால்கர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. மிக கனமழை பெய்யும் பட்சத்தில் மும்பை நகரில் பெரியளவில் வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.