7 வயது சிறுவனை சிறுத்தை கொன்ற கோபத்தில் கிராம மக்கள் காட்டிற்கு தீ வைப்பு

7 வயது சிறுவனை சிறுத்தை கொன்ற கோபத்தில் கிராம மக்கள் காட்டிற்கு தீ வைப்பு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் ஹாரினாகாரி பகுதியில் காட்டையொட்டிய கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று 7 வயது சிறுவனை கொன்று தின்று உள்ளது. நேற்று இரவு சிறுவன் சிறுநீர் கழிக்க வெளியே சென்ற போது அவனை சிறுத்தை தாக்கி உள்ளது. இதனையடுத்து கோபம் அடைந்த கிராம மக்கள் அப்பகுதியில் காட்டிற்கு தீ வைத்து உள்ளனர். இதனால் காட்டுப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.