அமர்நாத் கோவிலில் நேற்று 9 ஆயிரம் பேர் வழிபாடு

அமர்நாத் கோவிலில் நேற்று 9 ஆயிரம் பேர் வழிபாடு

கடந்த திங்கள் கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்ற 7 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலால் அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால், பக்தர்கள் தங்கி இருக்கும் முகாம்கள் மற்றும் அமர்நாத் கோவிலுக்குச் செல்லும் வழி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தினர் பலத்த பாதுகாப்புடன் பக்தர்களை அமர்நாத் ஆலயத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.இதனிடையே அமர்நாத் கோவிலில் நேற்று மட்டும் 9 ஆயிரம் பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனர்.150 க்கும் மேற்பட்ட வாகனங்களில் எல்லைப் பாதுகாப்பு படையினர், பலத்த பாதுகாப்புடன் அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். 15 நாட்களுக்கு முன்னர் தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இதுவரை 1 லட்சத்து 77 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Loading...