தொலைத்த குழந்தைகளை பெற்றோருடன் இணைத்த ஆதார்

தொலைத்த குழந்தைகளை பெற்றோருடன் இணைத்த ஆதார்

பெங்களூரு: பெற்றோரை தொலைத்த 3 குழந்தைகளுக்கு மீண்டும் அவர்களை மீட்டுக் கொடுத்துள்ளது மத்திய அரசின் ஆதார் அட்டை. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது பெங்களூருவில். பல ஆண்டுகளுக்கு முன்னர் தங்களின் பெற்றோர்களை பல்வேறு காரணங்களால் பிரிந்து தவித்த மூளைத் திறன் குறைந்த குழந்தைகள் 3 பேர் பெங்களூரு அரசுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். மூவருமே அறிவுத் திறன் மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகள் உடைய குழந்தைகள் என்பதால் அவர்களைப் பற்றிய உண்மைகள் அறிவதில் சிக்கல் இருந்தது. ஆனாலும் பொறுமையோடு காப்பக அதிகாரிகள் அவர்களை பாதுகாத்து வந்துள்ளனர். 
அந்த 3 குழந்தைகளுக்கும் தங்களது வாழ்வில் மறக்க முடியாத நாளாக நேற்று மாறியது. மூளை வளர்ச்சிக் குறைபாடு கொண்ட மோனு,  இவர்கள் தங்கி இருந்த அரசு காப்பகத்தில் சமீபத்தில், அங்கிருந்த குழந்தைகளுக்கான ஆதார் அடையாள எண் பதிவு நடத்தப் பட்டது. ஆதார் பதிவின்போது இந்த மூன்று குழந்தைகளின் பயொமெட்ரிக் அடையாளங்கள் அதாவது கண் கருவிழி மற்றும் கை ரேகை அடையாளங்கள் வேறு மாநில குழந்தைகளுடன் ஒத்துப் போயுள்ளன. 
அதனால் ஏற்கெனவே ஆதார் அட்டை எடுக்கப்பட்டதாகக் கூறி இவர்களது ஆதார் பதிவு நிராகரிக்கப் பட்டது. இதனால் இவர்களது பதிவுகள் ஒத்துப் போன இடங்களில் உள்ள முகவரிகளை, காப்பக அதிகாரிகள் ஆராய்ந்தனர். அதில், அங்கிருந்த நபர்கள் தங்களது குழந்தைகள் காணாமல் போய் ஆண்டுக்கணக்கில் ஆகிறது. அவர்களை கண்டுபிடித்து தாருங்கள் என்று புகார் அளித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, அந்த 3 பேரும், அவர்களது ஆதார் அடையாளங்கள் கண்டறியப்பட்ட முகவரிகளில் இருந்த அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்