சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோரை விடுவித்தது ஐகோர்ட்

சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோரை விடுவித்தது ஐகோர்ட்

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 14 வயதுச் சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுமியின் பெற்றோரை விடுதலை செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உ.பி., மாநிலம் நொய்டாவில், ஆருஷி தல்வார், என்ற 14 வயது சிறுமி மற்றும் வீட்டு வேலைக்காரர், ஹேம்ராஜ், 45, ஆகியோர், மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களிடையே முறையற்ற உறவு இருப்பதாக சந்தேகித்து, ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வர், நுபுர் தல்வார் ஆகியோர் கூட்டாக சேர்ந்த இருவரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.மிஸ்ரா மற்றும் பி.கே.நாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, ''சிறுமி ஆருஷி மற்றும் பணியாளர் ஹேம்ராஜை தல்வார் தம்பதியினர்தான் கொலை செய்தனர் என்பதை சிபிஐ நிரூபிக்க முடியவில்லை. கொலை செய்ததற்கான ஆதாரங்களும் சரியாக இல்லை. இதனால் சந்தேகத்தின் பலனை தல்வார் தம்பதிக்கு அளித்து அவர்களை விடுதலை செய்கிறோம்'' என்று தீர்ப்பளித்துள்ளது.