ஆதார் இணைப்புக்கு காலக்கெடு மார்ச்.31 வரை நீட்டிப்பு

ஆதார் இணைப்புக்கு காலக்கெடு மார்ச்.31 வரை நீட்டிப்பு

பான் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைப்பதற்கான அவகாசத்தை 2018 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பல்வேறு திட்டங்களுடன் ஆதார் எண் இணைக்கும் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால் ஆஜராகி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் 'மொத்தம் 139 சேவைகள் மற்றும் திட்டங்களுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு 2018 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அரசு டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கை வெளியிடும்.

எனினும் மொபைல் எண்ணுடன் ஆதாரை, 2018 பிப்ரவரி 6ம் தேதிக்கு முன் இணைக்க வேண்டும் என்ற காலக்கெடுவில் மாற்றம் இல்லை. இதுவரை ஆதார் எண் பெறாதவர்களுக்கு மொபைல் போனுடன் ஆதார் எண் இணைப்பதற்கு காலக்கெடு 2018ம் மார்ச் 31ம் தேதி வரை வழங்கப்படும்' எனக்கூறினார்.