ஆமதாபாத்தில் புல்லட் ரயில் திட்டம்: மோடி, ஜப்பான் பிரதமர் அடிக்கல் நாட்டினர்

ஆமதாபாத்தில் புல்லட் ரயில் திட்டம்: மோடி, ஜப்பான் பிரதமர் அடிக்கல் நாட்டினர்

ஆமதாபாத்: ஆமதாபாத் - அகமதாபாத்தில் இன்று காலை நடந்த விழாவில், பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர், ஷின்ஷோ அபேவும், புல்லட் ரயில் பணிகளுக்கான அடிக்கல்லைநாட்டினர்..மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணிஆட்சி அமைந்த பின், தாக்கல் செய்யப்பட்ட, முதல் ரயில்வே பட்ஜெட்டில், 'நாட்டில், அதிவேக புல்லட் ரயில் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.
 
அதில், குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலிருந்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பை வரை, முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம், ஜப்பானின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு லட்சத்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில், 65 சதவீத தொகையை, 0.1சதவீத வட்டியில், ஜப்பான் வழங்குகிறது.இரு நகரங்கள் இடையேயான 508 கி.மீ., துாரத்துக்கு இயக்கப்பட உள்ள புல்லட் ரயில், மணிக்கு, 320 கி.மீ., வேகத்தில் செல்லும். இது, 350 கி.மீ. வரை பின்னர் அதிகரிக்கப்படும்.
 
ரயில், சபர்மதி, வதோதரா உட்பட 12 ரயில்வே நிலையங்களில் நின்றுசெல்லும்.திட்டத்தின் கல்வெட்டை ரிமோட் கன்ட்ரோல் பொத்தானை அழுத்தி இரு நாட்டு பிரதமர்களும் திறந்து வைத்தனர்.விழாவில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.