அகிலேஷ் யாதவ் தடுக்கப்பட்டது ‘ஜனநாயகமற்ற செயல்’ -மாயாவதி

அகிலேஷ் யாதவ் தடுக்கப்பட்டது ‘ஜனநாயகமற்ற செயல்’ -மாயாவதி

விமான நிலையத்தில் அகிலேஷ் யாதவ் தடுக்கப்பட்டது ‘ஜனநாயகமற்ற செயல்’ என மாயாவதி விமர்சனம் செய்துள்ளார். “பிஜேபி அரசாங்கத்தின் சர்வாதிகார உதாரணம்” என கூறியுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, கூட்டணியை பார்த்து பா.ஜனதா அரசு பயம் கொண்டுள்ளது எனவே ஜனநாயகமற்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அனைத்து நிலைகளிலும் ஜனநாயகமற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என கண்டனம் தெரிவித்துள்ளார்.