அசாம் மாநிலத்தில் வெளிமாநில மீன்கள் இறக்குமதிக்கு தடை...

அசாம் மாநிலத்தில் வெளிமாநில மீன்கள் இறக்குமதிக்கு தடை...

ஆந்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து அசாமிற்கு இறக்குமதியாகும் மீன்களில் பார்மலின் எனப்படும் ஒரு வித ரசாயனம் கலந்திருப்பது அம்மாநில அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அசாம் மாநில அரசாங்கம் 10 நாட்களுக்கு ஆந்திரா மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதியாகும் மீன்களின் விற்பனையை தடை செய்துள்ளது. 

மீன்களில் பார்மலின் பயன்படுத்தப்படுவது குறித்து அசாம் மாநில சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிஜூஷ் ஹஷாரிகா கூறுகையில், “பார்மலின் கலந்த மீன்களை உண்ணும் மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் என்பதால் அசாம் மாநில அரசாங்கம், இன்னும் 10 நாட்களுக்கு வெளி மாநிலத்திலிருந்து இறக்குமதியாகும் மீன்களுக்கு தடை விதித்துள்ளது. 

கவுகாத்தி மீன்கள் மார்க்கெட்டிற்கு சென்று அதிகாரிகளுடன் சோதனையிடுகையில், மீன்களில் பார்மலின் என்னும் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தடையை மீறி மீன்களை விற்பனை செய்வோருக்கு 2 முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்” எனக் கூறினார்.