பா.ஜ.க. அராஜகம் செய்கிறது - ராகுல் காந்தி

பா.ஜ.க. அராஜகம் செய்கிறது - ராகுல் காந்தி

காந்திநகர்:குஜராத் மாநிலம் கேவதியா காலனியில் பா.ஜ.க. கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்-மந்திரி விஜய் ரூபானி கலந்து கொண்டார். அவரை சந்திக்க மறைந்த ராணுவ வீரர் அசோக் டாட்வியின் மகள் ரூபாள் டாட்வி மேடையை நோக்கி சென்றார். போலீசார் அந்தப் பெண்ணை பிடித்து தரதர வென்று இழுத்துச் சென்றனர்.

தனது தந்தை மரணத்திற்கு பிறகு அரசு கொடுப்பதாக அறிவித்த நிலத்தை இன்னும் கொடுக்கவில்லை. அதனால் முதல்-மந்திரியிடம் புகார் செய்யவே சென்றதாக  கூறினர்.இந்நிலையில், இச்சம்பவம் குறித்த வீடியோவை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேலும், ‘பா.ஜ.க. அரசின் அராஜகம் எல்லை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மனித நேயம் சிறிதும் இல்லாமல் விஜய் ரூபானி கூட்டத்தில் இருந்த பெண்ணை சந்திக்காமல் சென்றுள்ளார். அவருக்கு பல ஆண்டுகளாக நியாயம் மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு நீதி கிடைக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி விமர்சனம் செய்த சிறிது நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணிக் குடும்பத்திற்கு தேவையான நலத்திட்ட உதவிகளை உடனடியாக வழங்கும்படி முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.