மிசா சட்டத்தில் சிறை சென்ற லால்லு பிரசாத் யாதவுக்கு மாதம் ரூ.10,000 பென்சன்: பீகார் அரசு உத்தரவு..

மிசா சட்டத்தில் சிறை சென்ற லால்லு பிரசாத் யாதவுக்கு மாதம் ரூ.10,000 பென்சன்: பீகார் அரசு உத்தரவு..

மிசா சட்டத்தில் சிறை சென்றதால் லால்லு பிரசாத் யாதவுக்கு மாதம் ரூ.10,000 பென்சன் வழங்க பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநில அரசு சார்பில் மறைந்த மாபெரும் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் பெயரில் 2015-ம் ஆண்டு பென்சன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி தியாகிகள், சிறை சென்றவர்களுக்கு மாதம் தோறும் பென்சன் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த திட்டத்தின் கீழ் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லால்லு பிரசாத் யாதவுக்கு பென்சன் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லால்லு பிரசாத் யாதவ் 1974-ம் ஆண்டு மிசா சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி 6 மாதத்துக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்காக அவருக்கு பென்சன் வழங்க மாநில உள்துறை அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இந்த திட்டத்தில் 1 மாதம் முதல் 6 மாதம் வரை சிறை சென்றவர்களுக்கு மாதம் ரூ.5,000 பென்சனும், 6 மாதத்துக்கு மேல் சிறை சென்றவர்களுக்கு மாதம் ரூ.10,000 பென்சனும் வழங்கப்படுகிறது.

லால்லு பிரசாத் யாதவ் 6 மாதத்துக்கு மேல் சிறை சென்றதால் அவருக்கு மாதம் ரூ.10,000 பென்சன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.