இந்தியாவில் புல்லட் ரெயில் திட்டம்  சாத்தியம் இல்லை- திரிணாமுல் காங்கிரஸ் கருத்து

இந்தியாவில் புல்லட் ரெயில் திட்டம்  சாத்தியம் இல்லை- திரிணாமுல் காங்கிரஸ் கருத்து

மக்களவையில் இன்று ரெயில்வே மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுதிப் பந்தோபாத்யாய் பேசியதாவது:-

புல்லட் ரெயில் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்துவது சாத்தியம் இல்லை. அப்படியே செயல்படுத்தினாலும் அந்த ரெயில்களை அதிவேக ரெயில்கள் என்று அழைக்கலாமே தவிர, புல்லட் ரெயில்கள் என அழைக்க முடியாது. இந்த புல்லட் ரெயில் திட்டம் என்பது புரளியான மற்றும் தவறான வாக்குறுதி. புல்லட் ரெயில்கள் ஒரு தனி அமைப்பைக் கொண்டுள்ளன.

பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 100 ஆண்டுகள் பழமையான பாலங்களை அரசு ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். ரெயில்வேயில் கேங்மேன், டிரைவர்கள் வேலை நிறைய காலியாக உள்ளன. கிட்டத்தட்ட 2 லட்சம் கேங்மேன் வேலை காலியாக உள்ளன. டிரைவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. எப்போது இந்த காலிப் பணியிடங்களை நிரப்பப் போகிறீர்கள்? 

ரெயில்வேயில் உணவுக்கூடம், தூய்மை, உணவு பாதுகாப்பு மற்றும் தரத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பணி வழங்குவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ரெயில் பயணம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், பயத்துடன் இருக்கக் கூடாது. ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் ஒருங்கிணைத்திருப்பது, ரெயில்வே துறைக்கு உதவவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.