பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதியதில் தீ பிடித்து விபத்து

பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதியதில் தீ பிடித்து விபத்து

உத்தர பிரதேசத்தில்,  ஜெய்பூர் நோக்கி 50 பயணிகளுடன் படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.  இந்த பேருந்து கன்னூஜ் மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீ பற்றி எரிந்தன.  தீ பிடித்ததால், பேருந்தில் இருந்த பயணிகள் அபாயக்குரல் எழுப்பினர்.  

தகவல் அறிந்து விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 21 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  20 -பேரை இன்னும் மீட்க முடியாததால், அவர்கள் உயிரிழந்து இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.