சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 10 பேர் வீரமரணம்

சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 10  பேர் வீரமரணம்

புதுடில்லி: சத்தீஸ்கரில் பலியான வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.சி.ஆர்.பி.எப். சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள கிஸ்தாராம் பகுதியில் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வீரர்களின் ரோந்து பணியை முன்கூட்டியே தெரிந்திருந்த நக்சலைட்கள், அந்த பாதையில் ஏராளமான வெடிபொருட்களை மறைத்து வைத்து வெடிக்க செய்ததில் 10 வீரர்கள் வீரமரணடைந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.