காஷ்மீரில் ரமலானை ஒட்டி ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவைக்க மத்திய உள்துறை உத்தரவு!

  காஷ்மீரில் ரமலானை ஒட்டி ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவைக்க மத்திய உள்துறை உத்தரவு!

நாளை முதல் ரமலான் மாதம் தொடங்குவதை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இதற்கு அம்மாநில பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், ஒரு மாதத்திற்கு ராணுவ நடவடிக்கைகள் (தேடுதல் வேட்டை, தீவிர சோதனை போன்றவை) எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதேவேளையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் நடந்தால் தக்க பதிலடி கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.