யானை மிதித்து உயிரிழப்பவர்களுக்கான இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்வு...

யானை மிதித்து உயிரிழப்பவர்களுக்கான இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்வு...

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி தினமான இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் மந்திரி மகேஷ் சர்மா, யானை மிதித்து உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீட்டு தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுள்ளது’ என அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தினேஷ் திரிவேதி பேசுகையில், ’யானை வழித்தடங்களை மனிதர்கள் ஆக்கரமித்துள்ள காரணத்தினால் ரெயில் விபத்து போன்ற இயற்கைக்கு மாறான முறையில் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, கூகுல் எர்த் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி யானைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதி மற்றும் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், ‘ கூகுல் எர்த் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யானைகளை பாதுகாப்பது சிறந்த திட்டம். இதை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கும்’ என தெரிவித்தார்.