டெல்லி தோல்வி எதிரொலி- காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா ராஜினாமா

டெல்லி தோல்வி எதிரொலி- காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா ராஜினாமா

டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது. 66 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோற்றது. அதோடு 63 இடங்களில் டெபாசிட் கிடைக்கவில்லை. கடந்த முறையை போலவே தற்போது ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.காங்கிரஸ் கட்சியின் ஓட்டு சதவீதம் வெகுவாக குறைந்தது. 2015 தேர்தலில் அந்த கட்சிக்கு 9.7 சதவீத ஓட்டுகள் கிடைத்தது. அது தற்போது 4.27 சதவீதமாக குறைந்துள்ளது.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட மோசமான தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று நான் ராஜினாமா செய்துள்ளேன். எனது ராஜினாமா குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும்.இவ்வாறு சுபாஷ்சோப்ரா தெரிவித்துள்ளார்.