டென்மார்க் பெண் கற்பழிப்பு; 5 பேரின் மரணம்வரை ஆயுள் தண்டனை

டென்மார்க் பெண் கற்பழிப்பு; 5 பேரின் மரணம்வரை ஆயுள் தண்டனை

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 14ந்தேதி டென்மார்க் நாட்டை சேர்ந்த 52 வயது பெண் சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.  அதன்பின்னர் அன்றிரவு ரெயில்வே நிலையம் அருகே பஹர்கஞ்ச் பகுதியில் அமைந்த அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பியுள்ளார்.  ஆனால் வழி தெரியாமல் அருகில் இருந்த ஒரு நபரிடம் ஓட்டலுக்கு செல்லும் வழி கேட்டுள்ளார்.

அந்த நபர் ரெயில்வே நிலையத்திற்கு அருகே தனியாக இருந்த பகுதிக்கு பெண்ணை அழைத்து சென்றார்.  அங்கு அவரது பொருட்களை கொள்ளை அடித்த 9 பேர் கத்தி முனையில் அவரை கற்பழித்துள்ளனர்.இதுபற்றி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.

தொடர்ந்து விசாரணை நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 10ந்தேதி நீதிபதிகள், 5 கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரணம்வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.