அசாமில் 5.5 ரிக்டரில் நிலநடுக்கம்

அசாமில் 5.5 ரிக்டரில் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 அலகாக பதிவாகியிருந்தது. அதேபோல் ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்திலும் இன்று காலை 5.43 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 அலகாக பதிவாகியிருந்தது.

அதன்பின்னர் அசாமில் உள்ள கோக்ரஜார் பகுதியில் இன்று 5.5 என்ற ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பீகார், மேற்கு வங்காளத்திலும் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக சிலிகுரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர்