மகாராஷ்டிரா கெமிக்கல் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலி

மகாராஷ்டிரா கெமிக்கல் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள பாய்சர் பகுதியில் கெமிக்கல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.இன்று மாலை அந்த தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடிவிபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்துக்கு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களது குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.