குஜராத்தில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பரிதாப பலி

குஜராத்தில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பரிதாப பலி

குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டம், காண்டியா பைபாஸ் அருகிலுள்ள உமையா சர்க்கிள் பகுதியில் இன்று மதியம் திடீரென காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 8 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஏற்கனவே, இன்று காலை குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியானது நினைவிருக்கலாம்.