குஜராத்:  இறுதிக் கட்ட பிரச்சாரம் இன்றுடன் ஓய்ந்தது

குஜராத்:  இறுதிக் கட்ட பிரச்சாரம் இன்றுடன் ஓய்ந்தது

அகமதாபாத் :  குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி மற்றும் 14ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதற்கான பிரச்சாரங்கள் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து நடந்து வந்தது.

இன்றோடு அங்கு பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ளது.மொத்தம் இருக்கும் 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 57 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 977 வேட்பாளர்கள் களம் இறங்க உள்ளனர்.

22 ஆண்டுகளாக அங்கு ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.,விற்கும், ராகுல் தலைமையில் விறுவிறுப்பாக பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸுக்கும் இந்த முறை குஜராத்தில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.