புதுவையில் முழு அடைப்பு போராட்டம்

புதுவையில் முழு அடைப்பு போராட்டம்

மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.புதுவையிலும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி நகரப்பகுதியில் உள்ள நேரு வீதி, மிஷன் வீதி, காந்திவீதி, அண்ணாசாலை, காமராஜர் சாலை, 100 அடி ரோடு, மறைமலையடிகள் சாலையில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், மீன் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளும், தொழிற்பேட்டைகளும் செயல்படவில்லை.