பிரதமர் மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம்...

 பிரதமர் மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம்...

லோக் ஆயுக்தா, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு இடம் ஒதுக்கி தரவேண்டும் என பிரதமர் மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.  சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:லோக்பால் நடைமுறை, லோக் ஆயுக்தா நியமனம், விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் பென்ஷன் மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி போராட்டம் நடத்தவுள்ளேன்.

ஜன்லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராட்டம் நடத்திய போது கிடைத்த பொதுமக்களின் மகத்தான ஆதரவு, அடுத்து விவசாயிகளின் பிரச்சினைகளை வலியுறுத்தி நடத்த இருக்கும் போராட்டத்துக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் போலீசார், டெல்லி உள்ளாட்சி அதிகாரிகள் உள்பட பலருக்கு இது தொடர்பாக பலமுறை கடிதங்கள் எழுதியுள்ளேன்,. ஆனால் அந்த கடிதங்களுக்கு எந்த பதிலும் இல்லை.

இதேபோல், கடந்த சில ஆண்டுகளில் 43-க்கும் மேற்பட்ட கடிதங்களை பிரதமர் மோடிக்கு அனுப்பினேன். அவரும் ஒருபோதும் பதில் அளிக்கவில்லை. தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்துவதில் மத்திய அரசு பலவீனமாக உள்ளது என குற்றம் சாட்டினார்.