ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு 24-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு 24-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீடு அதிகளவில் பெற உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தியை, வரும் 24ம் தேதி வரை டில்லி திஹார் சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில், கார்த்தியை கைது செய்துள்ள சி.பி.ஐ., பல நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. இன்று (மார்ச் 12) அவரை, டில்லி பாட்டியாலாவில் உள்ள சி.பி.ஐ., நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். கார்த்தியின் ஜாமின் மனுவை உடனடியாக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. அவரை 12 நாட்களுக்கு அதாவது வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் டில்லி திஹார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.