செம்மரம் வெட்டினால் சுட்டு பொசுக்குவோம்: ஆந்திர போலீசார்

செம்மரம் வெட்டினால் சுட்டு பொசுக்குவோம்: ஆந்திர போலீசார்

திருப்பதி: ஆந்திரா மாநிலத்தில் செம்மரம்  வெட்டி கடத்த படுவது தொடரும் சம்பவமாகிவிட்டது.இந்நிலையில் செம்மரம் வெட்ட யார் வந்தாலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என ஆந்திர மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து திருப்பதியில் ஆந்திர மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,காந்தாராவ் கூறியதாவது: செம்மரம் வெட்ட யார் வந்தாலும், அதனை தடுக்க துப்பாக்கிச்சூடு நடத்துவோம். செம்மரம் வெட்ட வருபவர்களையும் கடத்தல்காரர்களாக தான் பார்க்கிறோம். செம்மரம் வெட்ட வருபவர்களின் கைகளில் தமிழக நாட்டு துப்பாக்கிகள் தான் உள்ளன. ஜவ்வாது மலையை சேர்ந்தவர்கள் துப்பாக்கியுடன் செம்மரம் வெட்ட வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்