இந்தியா 2030-ல் உலகின் 2-வது பெரிய பொருளாதார வல்லரசாகும்: பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா 2030-ல் உலகின் 2-வது பெரிய பொருளாதார வல்லரசாகும்: பிரதமர் நரேந்திர மோடி

வரும் 2030-ம் ஆண்டில் உலகின் 2-வது பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சார்பில் டெல்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவில் நேற்று சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் 95 நாடுகளைச்
சேர்ந்த எண்ணெய் வளத் துறை அமைச்சர்கள், 70 நாடுகளைச் சேர்ந்த 7,000 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:பொருளாதாரத்தில் உலகில் அதிவேகமாக வளரும் நாடு என்றபெருமையை இந்தியா பெற்றுள்ளது. வரும்
2030-ம் ஆண்டில் உலகின் 2-வது பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா உருவெடுக்கும். இந்த ஆண்டில் நாடு முழுவதும் 100 சதவீத வீடுகளுக்கு மின்
இணைப்பு என்ற சாதனையை எட்டியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.