தேவையற்ற அழைப்புகளை பெறுவதில் இந்தியர்கள் முதலிடம்

தேவையற்ற அழைப்புகளை பெறுவதில் இந்தியர்கள் முதலிடம்

புதுடில்லி: ‛ஸ்பேம் கால்ஸ்' எனப்படும் தேவையற்ற அழைப்புகளை, உலகளவில் அதிகமாக பெறும் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நாடு இந்தியா. தேவையற்ற மொபைல் அழைப்புகளை பெறுவதில் உலக அளவில் இந்தியர்கள் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துளளது.
‛ஸ்பேம் கால்' அழைப்புகள் குறித்து ட்ரூகாலர் நிறுவனம் நடத்திய ஆய்வில் முதலிடம் இந்தியாவிற்கு கிடைத்தது. அடுத்த இரு இடங்கள் முறையே அமெரிக்காவும், பிரேசிலும் பிடித்தன.
 அங்கு மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களே 54 சதவீதம், தேவையற்ற அழைப்புகளை கொடுத்து வாடிக்கையாளர்களை தொல்லை செய்கிறது. வர்த்தக நிறுவனங்கள் 21 சதவீத தேவையற்ற அழைப்புகளையும், தெரிந்தே தொல்லை தரும் வகையில் 20 சதவீத அழைப்புகளும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வருவதாக ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.