ஏர்போர்ட்டில் பயணியை அடித்து,உதைக்கும் இன்டிகோ ஊழியர்கள்

ஏர்போர்ட்டில் பயணியை அடித்து,உதைக்கும் இன்டிகோ ஊழியர்கள்

டெல்லி விமான நிலையத்தில் அக்டோபர் 15-ம் தேதி இண்டிகோ விமானத்தில் இருந்து இறங்கிய ராஜீவ் கட்டியால் என்ற பயணிக்கும், அந்த விமான ஊழியர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. பயணிகள் பஸ்சில் ஏற முயன்ற ராஜீவை ஏற விடாமல் மூர்க்கத்தனமாக ஊழியர்கள் தடுத்தனர்.இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து கூறிய ராஜீவ் விமானத்தில் வந்திறங்கிய நான் பேருந்துக்காக காத்திருந்தேன். விமான நிழலில் நின்று கொண்டிருந்த என்னை இன்டிகோ ஊழியர் ஒருவர் தள்ளிப் போய் நிற்குமாறு திட்டினார். திட்டுவதற்கு பதில் பேருந்துக்கு ஏற்பாடு செய்யலாமே என்று நான் கூறினேன். என்ன செய்வது என்று நீங்கள் ஒன்றும் சொல்லித் தர வேண்டாம் என்றார் அவர். பேருந்து வந்தபோது அதில் ஏறவிடாமல் தடுத்தனர். இவனுக்கு பாடம் கற்பிப்போம் என்று கூறி என்னை அடித்து கீழே தள்ளி கழுத்தை நெரித்தனர் என்றார்.இதையடுத்து பயணியிடம் மன்னிப்பு கோரிய இண்டிகோ விமான நிறுவனம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.