இந்தோனேசியா-நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 374 ஆக உயர்வு

இந்தோனேசியா-நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 374 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 374 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவின் லாம்போக் தீவில்  திங்கட்கிழமை இரவு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அலகில் 6.8, 7 ஆகப் பதிவாகின. அதன் 132 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.