ஜம்மு காஷ்மீர்;  2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீர்;  2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

ஸ்ரீநகர்: காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் சோபூர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற  துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.