ஜம்மு: உத்தம்பூர் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து 16 பேர் காயம்

 ஜம்மு: உத்தம்பூர் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து 16 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர்:ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் பஸ் ஒன்று பயணிகளுடன் ராம்நகரில் இருந்து கோர்டிக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது  ஜந்த்ரெர் பகுதியில் திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புபடையினர் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.