இந்தியர்களுக்கான விசா நடைமுறையை  தளர்த்த்திய ஜப்பான்

இந்தியர்களுக்கான விசா நடைமுறையை  தளர்த்த்திய ஜப்பான்

புதுடெல்லி:இந்தியா - ஜப்பான் இடையே உள்ள நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், சுற்றுலா மற்றும் வணிக காரணங்களுக்காக ஜப்பான் வரும் இந்தியர்களுக்கு விசா நடைமுறைகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. புதிய விதிமுறைகளை அந்நாட்டு தூதரகம் இன்று வெளியிட்டுள்ளது.புதிய விதிமுறைகள் வரும் ஜனவரி முதல் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஓராண்டில் அதிகபட்சமாக இருமுறை ஜப்பான் சென்றவர்களுக்கு 5 ஆண்டுகள் செல்லத்தக்க மற்றும் 90 நாட்கள் ஜப்பானில் தங்கிக்கொள்ளும் வகையிலான புதிய விசா எடுத்துக்கொள்ளலாம். இந்த விதிமுறை தளர்வானது சுற்றுலா மற்றும் வணிகம் சம்பந்தமாக அடிக்கடி ஜப்பான் வருபவர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.