பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஜப்பான் முழு உதவிகள் செய்யும் - ஷின்சோ அபே

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஜப்பான் முழு உதவிகள் செய்யும் - ஷின்சோ அபே

ஆமதாபாத்: புல்லட் ரயில் திட்டத்தினை துவக்கி வைத்த பிறகு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, 'நமஸ்கார்' எனக்கூறியபடி பேசுகையில், புல்லட் ரயில் திட்டத்தை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜப்பான் புல்லட் ரயில் திட்டத்திற்கான பொன் விழா ஆண்டு இது. இந்த ஆண்டில் இந்திய புல்லட் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா ,ஜப்பான் உறவில் முக்கியமான நாள் இது.பிரதமர் மோடி மிகச்சிறந்த தொலைநோக்கு சிந்தனை கொண்டவ தலைவர்.

மோடிக்கு இந்தியா குறித்த நீண்ட கால திட்டங்கள் உள்ளன.புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற கனவு மோடிக்கு உள்ளது. அந்த கனவுக்கு ஜப்பான் துணை நிற்க கோருகிறார். மோடியின் புதிய இந்தியா கனவுக்கு ஜப்பான் துணை நிற்கும். மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஜப்பான் முழு உதவிகள் செய்யும். இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயல்பட்டால் முடியாத விஷயம் எதுவுமே கிடையாது. 100க்கும் மேற்பட்ட ஜப்பானிய பொறியாளர்கள் இந்தியா வந்து புல்லட் ரயில் திட்டத்திற்கு உதவி செய்வார்கள். இரு நாட்டு பொறியாளர்களும் இணைந்து திட்டத்தை வெற்றி பெற செய்வார்கள்.