அதிர்ஷ்ட நாற்காலி மோடி அமர்ந்தால் மீண்டும் பிரதமராவது நிச்சயம்

அதிர்ஷ்ட நாற்காலி மோடி அமர்ந்தால் மீண்டும் பிரதமராவது நிச்சயம்

லக்னோ: தேர்தல் என்றாலே ராசி, அதிர்ஷ்டம் ஆகியவற்றின் மீது அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கை வந்து விடுகிறது. அதன் அடிப்படையில் அவர்கள் வெற்றி, தோல்வியை முடிவு செய்கிறார்கள்.

உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் நகரத்தில் உள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் மரத்தலான ஒரு நாற்காலியை ஒரு சிறிய கண்ணாடி அறையில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள்.இந்த நாற்காலி பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்த நாற்காலி. அதிர்ஷ்ட நாற்காலி.

அந்த நாற்காலியில் பிரதமர் மோடி அமர்ந்தபோதெல்லாம் அது பாரதீய ஜனதா கட்சிக்கு வெற்றியைத் தேடித்தந்திருக்கிறது என்பதுதான் கடந்த கால வரலாறு என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) கான்பூர் வந்து, வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்துப்பேசுகிறார்.

இப்போதும் அவர் அந்த அதிர்ஷ்ட நாற்காலியில் அமர வேண்டும் என்று கான்பூர் நகர பாரதீய ஜனதா கட்சி, வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதி இருக்கிறது. இதனால் இன்றைய கூட்டத்திலும் அவர் அந்த நாற்காலியில் அமர்வாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.