ம.பி., பள்ளிகளில் வருகைபதிவின் போது ‘ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும்

ம.பி., பள்ளிகளில் வருகைபதிவின் போது ‘ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும்

சாட்னா: அரசு பள்ளிகளில் வருகைபதிவின் போது மாணவர்கள், 'யெஸ் சார் - யெஸ் மேடம்' என கூறுவதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் என மத்திய பிரதேச மாநில கல்வி அமைச்சர் விஜய் ஷா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில கல்வித் துறை அமைச்சர் விஜய் ஷா கூறியதாவது:

மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தில் முதல் கட்டமாக அரசு பள்ளிகளில் வருகை பதிவை வாசிக்கும் போது யெஸ் சார், மேடம் என சொல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக மாணவர்கள் ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும்.முதல்கட்டமாக சாட்னா மாவட்ட பள்ளிகளில் வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதனைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இது நடைமுறைக்கு வரும்.