மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்

மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்

குஜராத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ''முகலாய மன்னர் ஜஹாங்கிருக்குப் பிறகு ஷாஜகான் பதவியேற்றதைப் போன்றது என, காங்கிரஸ் தலைவர் தேர்தல் பற்றி அக்கட்சியினர் பெருமையுடன் கூறுகின்றனர்.

ஷாஜகானுக்குப் பிறகு ஒளரங்கசீப் ஆட்சி பொறுப்பை ஏற்றார். ஒரு குடும்ப ஆட்சியை காங்கிரஸ் ஏற்றுக் கொள்கிறதா? ஆனால் எங்களைப் பொறுத்தவரை ஒளரங்கசீப் ஆட்சி வேண்டாம்.

125 கோடி மக்கள் விரும்பும் ஆட்சியே நடைபெற வேண்டும்'' என கடுமையாக விமர்சித்துப் பேசினார். மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


இதையடுத்து மணிசங்கர் அய்யர், ''நான் மோடியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தவறான அர்த்தத்தில் மோடியை விமர்சிக்கவில்லை'' என்றார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மணிசங்கர் அய்யர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.