மும்பை பயங்கரவாத தாக்குதல்... நினைவிடத்தில் முதல் – மந்திரி அஞ்சலி

மும்பை பயங்கரவாத தாக்குதல்... நினைவிடத்தில் முதல் – மந்திரி அஞ்சலி

மும்பை:மும்பையில் கடந்த 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  18 போலீசார் உள்பட 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 300–க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் தவிர மற்ற 9 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்.


மும்பை மக்களின் மனதில் நீங்கா காயத்தை விட்டு சென்றுள்ள இந்த பயங்கர தாக்குதல் நடந்து நேற்றுடன் 9 ஆண்டுகள் முடிந்துள்ளன. இதையொட்டி பயங்கரவாத தாக்குதலில் பலியான போலீசாருக்கு மெரின்டிரைவில் உள்ள நினைவிடத்தில் கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல் – மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மந்திரிகள், மாநில டி.ஜி.பி. சதீஸ் மாத்துர், மும்பை போலீஸ் கமி‌ஷனர் தத்தா பட்சல்கிகர், மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.