பிரதமர் சீக்கிய குரு கோபிந்த் சிங் நினைவு நாணயம் வெளியிடுகிறார்

பிரதமர் சீக்கிய குரு கோபிந்த் சிங் நினைவு நாணயம் வெளியிடுகிறார்

புதுடெல்லி: 10-வது சீக்கிய குருவான கோபிந்த் சிங் பிறந்தநாளை கொண்டாடும் வகையில்  நினைவு நாணயத்தை பிரதமர் மோடி நாளை வெளியிடவுள்ளார்.இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி, அவரது இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், குரு கோபிந்த் சிங் நினைவு நாணயத்தை வெளியிட்டு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.