ஒக்கி புயல்: லட்சத்தீவுக்கு பீகார் முதல் மந்திரி ரூ. 1 கோடி நிதியுதவி

ஒக்கி புயல்: லட்சத்தீவுக்கு பீகார் முதல் மந்திரி ரூ. 1 கோடி நிதியுதவி

பாட்னா:ஒக்கி புயலால் சீர்குலைந்த லட்சத்தீவுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக பீகார் முதல்- மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், ’மிகவும் துயரம் மிகுந்த இந்த தருணத்தில் லட்சத்தீவு பகுதியில் இன்னலுறும் மக்களின் வேதனையுடன் நாங்களும் பங்கேற்கிறோம்.

ஒக்கி புயலால் சீர்குலைந்த லட்சத்தீவின் நிவாரணப் பணிகளுக்கு பீகார் முதல் மந்திரி நிவாரண நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் அனுப்பி வைக்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.