காங்கிரஸ் கட்சியுடன் எந்த மாநிலத்திலும் கூட்டணி கிடையாது - மாயாவதி திட்டவட்டம்

காங்கிரஸ் கட்சியுடன் எந்த மாநிலத்திலும் கூட்டணி கிடையாது - மாயாவதி திட்டவட்டம்

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு களம் இறங்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், பல்வேறு பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட முயற்சிக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து போவதை தடுக்க இது உதவும் என கருதப்பட்டது.

ஆனால் இந்த முயற்சி, எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மட்டும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியும், முலாயம் சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சியும் கரம் கோர்த்துள்ளன.இந்த நிலையில், டெல்லியில் தனது கட்சியை சேர்ந்த பல்வேறு மாநில தலைவர்கள் மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி நேற்று பேசினார்.