உ.பி. முதல்வர் நிகழ்ச்சிகளுக்கு ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம்: முதல்வர் அலுவலகம் உத்தரவு

உ.பி. முதல்வர் நிகழ்ச்சிகளுக்கு ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம்: முதல்வர் அலுவலகம் உத்தரவு

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா பகுதியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு வீரர் பிரேம் ஷாகர் பாகிஸ்தான் வீரர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து உத்தரபிரதேச முதல் வர் யோகி ஆதித்யநாத் அவரது இல்லத்துக்கு நேரடியாகச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி னார். மேலும் ரூ.4 லட்சம் இழப் பீட்டுத் தொகையையும் குடும்பத் தினரிடம் அவர் வழங்கினார்.இதேபோல் சிஆர்பிஎப் படையைச் சேர்ந்த உதவி ஆய் வாளர் ஷகாப் சுக்லா கொல்லப் பட்டார். இவரும் உ.பி-யைச் சேர்ந்தவர் என்பதால், அவரது இல்லத்துக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரடியாகச் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் ரூ.6 லட்சம் இழப்பீட்டுத் தொகையையும் அவர் வழங்கினார்.
முன்னதாக முதல்வர் வருகையை ஒட்டி உயிரிழந்த ராணுவ வீரரின் வீட்டில் ஏசி வசதி, சோபா, காவித் துண்டுகள் மற்றும் சாலை முழுவதும் சிவப்பு கம்பள விரிப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்திருந்தனர்.மேலும் முதல்வர் அங்கிருந்து சென்ற பின்னர் அந்தப் பொருட்கள் எல்லாம் திரும்பப் பெறப்பட்டன. இது முதல்வரின் கவனத்துக்குச் சென்றதை அடுத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து கடந்த 10-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.அதில் முதல்வர் மக்களை நேரடியாகச் சந்திக்க வரும்போது இதுபோன்ற சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யக்கூடாது. பொதுமக்களுக்கு தொந்தரவு தரும் விஷயங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்றனர்.