ராகுல் காந்தியின் பிறந்த நாள்: பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து

ராகுல் காந்தியின் பிறந்த நாள்: பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து


புதுடெல்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி அதில் கூறியிருப்பதாவது:- 

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ராகுல் காந்தி, நீண்ட நாள் நல்ல உடல்நலத்துடன்  வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தற்போது தனது தாய்வழிப்பாட்டியை சந்திக்க இத்தாலியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Loading...