மும்பை கடலோர பகுதியில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்...

மும்பை கடலோர பகுதியில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்...

மகாராஷ்டிராவில் 7 பேருடன் சென்ற பவான் ஹன்ஸ் ரக ஹெலிகாப்டர் ஒன்று மும்பை கடலோர பகுதியில் மாயம் ஆனது. மகாராஷ்டிராவில் ஜுஹு விமான நிலையத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் 5 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகளுடன் ஹெலிகாப்டர் ஒன்று இன்று புறப்பட்டு சென்றது.

அந்த ஹெலிகாப்டர் எண்ணெய் நிறுவனத்தின் விமான கட்டுப்பாட்டு அறையுடன் காலை 10.30 மணிவரை தொடர்பில் இருந்தது.  அதன்பின் அவர்கள் எந்த தொடர்பிலும் இல்லை.  இதனை தொடர்ந்து இந்திய கடலோர காவல்படையினருக்கு எண்ணெய் நிறுவனம் தகவல் தெரிவித்தது.  அவர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணியை தொடங்க உள்ளனர்.