‘பெட்’பாட்டிலில் குடிநீர், குளிர்பானம் விற்க தடை - பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு

 ‘பெட்’பாட்டிலில் குடிநீர், குளிர்பானம் விற்க தடை - பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு

மறுசுழற்சி செய்ய முடியாத ‘பெட்’ பாட்டில்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்ய ஐ.ஆர்.சி.டி.சி., பதஞ்சலி, கோகோ கோலா, பெப்சிகோ, பிஸ்லெரி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆதித்யா துபே என்ற 16 வயது சிறுவன், இந்த மனுவை தாக்கல் செய்துள்ளான்.

அதில் அவன் மேலும் கூறியிருப்பதாவது:-

இந்த பாட்டில்களை உபயோகித்து விட்டு குப்பையில் தூக்கி எறிகிறார்கள். இதனால் நிலமும், சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. ஆகவே, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி, இந்த கழிவுகளை மேற்கண்ட நிறுவனங்கள் திரும்பப்பெறும்வரை, ‘பெட்’ பாட்டில்களில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவன் கூறியுள்ளான்.இந்த மனு, இவ்வாரம் விசாரணைக்கு வருகிறது.