புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அகமது கானை சுட்டு வீழ்த்திய  இந்திய பாதுகாப்பு படை

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அகமது கானை சுட்டு வீழ்த்திய  இந்திய பாதுகாப்பு படை

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14–ந் தேதி துணை ராணுவத்தினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

 இதில் முக்கியமாக, மேற்படி தாக்குதலுக்கு உதவி செய்த பயங்கரவாதியை அதிகாரிகள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.

அதன்படி புல்வாமா மாவட்டத்தின் மிர் மொகல்லா பகுதியை சேர்ந்த முதாசிர் அகமது கான் என்கிற முகமது பாய் (வயது 23) என்ற எலெக்ட்ரீசியனே இந்த தாக்குதலுக்கு தேவையான உதவிகளை செய்திருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. 
பயங்கரவாதி முதாசிர் அகமது கான் கடந்த 2017–ம் ஆண்டுவாக்கில் ஜெய்ஷ்–இ–முகமது இயக்கத்தில் இணைந்திருக்கிறார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த பயங்கரவாத இயக்கத்தை மறுசீரமைத்த நூர் முகமது தந்திரியின் மரணத்துக்குப்பின் கடந்த ஆண்டு ஜனவரி 14–ந் தேதி வீட்டை விட்டு மாயமாகி உள்ளார்.

சஞ்சுவான் ராணுவ முகாம், லெத்போரா சி.ஆர்.பி.எப். முகாம்கள் மீது ஏற்கனவே நடந்த தாக்குதல்களில் இவரது பங்களிப்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழலில், புல்வாமா தாக்குதலிலும் இவனே முக்கிய பங்காற்றி இருப்பது பாதுகாப்பு படையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.