ராம்நாத் கோவிந்த் சைப்ரஸ், பல்கேரியா3 நாடுகளுக்கு சுற்று பயணம் தொடங்கினார்

ராம்நாத் கோவிந்த் சைப்ரஸ், பல்கேரியா3 நாடுகளுக்கு சுற்று பயணம் தொடங்கினார்

புதுடெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சைப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு ஆகிய 3 நாடுகளில் சுற்று பயணம் மேற்கொள்கிறார்.  இதற்காக அவர் இன்று விமானத்தில் புறப்பட்டு சென்றார்.இந்த பயணத்தில் அவர் 3 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பொருளாதார அடிப்படையிலான விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதன்படி சைப்ரஸ் நாட்டிற்கு (செப்டம்பர் 2 முதல் 4 வரை) இன்று செல்லும் அவர் அந்நாட்டு அதிபர் நிகோசை சந்தித்து இருதரப்பு வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.  3 நாட்கள் சுற்று பயணத்திற்கு பின்னர் அவர் (செப்டம்பர் 4 முதல் 6 வரை) பல்கேரியா செல்கிறார்.